பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மூன்று மாடி விடுதி கட்டடம் திறந்துவைப்பு (PHOTOS)
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று தள பெண் நோயாளர் விடுதிக் கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தலமையில் இன்று காலை இடம்பெற்றது.
124 மில்லியன் ரூபா செலவில் பெண்கள் உளநல சிகிச்சை விடுதி, பெண்கள் மருத்துவ விடுதி, பெண்கள் சத்திரசிகிச்சை விடுதி என 100 படுக்கை வசதிகளை கொண்டதாக இந்த கட்டடத் தொகுதி காணப்படுகிறது.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.மோகநாதன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் கமலநாதன், வைத்திய அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.








