தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் ஏற்பட்ட பதற்ற நிலை - 15 பேர் காயம்
களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று பிற்பகல் நோயாளர்களைப் பார்க்க வந்த நோயாளிகள் குழுவிற்கும் தனியார் மருத்துவமனை பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளர்களைப் பார்க்க வந்த நபர் ஒருவரும், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் உடல்நிலையைப் பார்ப்பதற்காக சுமார் 5 பேர் வந்திருந்ததாகவும், அவர்கள் வைத்தியசாலை வளாகத்துக்குள் செல்வது தொடர்பான கருத்த மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோதல் நிலைமை
இதன் காரணமாக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நோயாளி ஒருவரைப் பார்க்க வந்த ஒருவரிடமிருந்து அனுமதிப் பத்திரத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர் பறித்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், கிட்டத்தட்ட 15 பேர் அடிதடியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்திய இருவரும் நாகொட பொது வைத்தியசாலையின் ஒரே பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் மேலும் பலர் லேசான காயம் அடைந்தனர்.
விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலும் நாகொட பொது வைத்தியசாலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.