வெளிநாடொன்றில் பயங்கர விமான விபத்து! 9 பேர் பலி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெற்ற தனியார் ஜெட் விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவின் க்ரெஸ்ட்ஹேவன் குடியிருப்புப் பகுதியில் நேற்று(01.11.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Learjet 60 ரக வர்த்தக ஜெட் விமானம், உள்ளூர் நேரப்படி நண் பகல் 12.50 அளவில்,டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த போதே, விபத்து நேர்ந்துள்ளது.
விசாரணை
விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில், வீதியில் பாரிய பள்ளம் ஏற்பட்டதுடன் தீப்பற்றிய சிதைவுகளும் கட்டிடப் பொருட்களும் சிதறிக் கிடந்தன.

சம்பவ இடத்தில் தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்காவின் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri