மன்னார் கடலில் சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளி
மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கடற்றொழில் துறையில் இருந்து கடந்த 30ஆம் திகதி கடலுக்கு சென்ற கடற்றொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலமானது இன்று (01.08.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலில் குதித்த கடற்றொழிலாளி
சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளி காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கடற்றொழில் துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி கடற்றொழிலுக்கு கண்ணாடியிழை படகில் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் கடலில் வலையை பாய்ச்சி விட்டு கரைக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.

இதன் போது குறித்த படகில் எரிபொருள் முடிந்ததன் காரணமாக எரிபொருளை எடுத்து வரலாம் எனும் நோக்கில் குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் குதித்து நீந்தி கரை சேருவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் 30ஆம் திகதி வியாழன் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த சந்தர்ப்பத்தில் கட்டாஸ்பத்திரி பகுதியில் இருந்து தொழிலுக்குச் சென்ற சக கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து நின்ற குறித்த படகையும் கடற்றொழிலாளரையும் மீட்டு கரைக்கு வந்துள்ளனர்.
சடலம் மீட்பு
மேலும் எரிபொருளை பெற்றுக்கொண்டு வருவதாக கூறி கடலில் நீந்திச் சென்ற நிலையில் காணாமல் போன சக கடற்றொழிலாளரையும் தேடியுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர் தொடர்பாக எவ்வித தகவலும் தெரியாத நிலையில் எருக்கலம்பிட்டி கடற்றொழிலாளர்கள் இன்று சனிக்கிழமை (1) காலை கடலில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்டாஸ்பத்திரி கடற்றொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களுக்கு அமைவாக காட்டாஸ்பத்திரி கடற்றொழிலாளர்கள் தேடிச்சென்று குறித்த சடலத்தை மீட்டதுடன் பேசாலை பொலிசாருக்கு தகவல் வழங்கி குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இதையடுத்து மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri