தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையின் விடுதிகள்
ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலை இன்று (24) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
ஹொரவ்பொத்தானை -கிவுளக்கட பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவர் கடந்த 20ஆம் திகதி தனக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக மருத்துவ ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக காய்ச்சல்,இருமல் இருப்பதால் மேலதிக சிகிச்சைக்காக அப்பெண்ணை அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் போது கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலை சிறுவர் மற்றும் பெண்கள் விடுதியை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் மற்றும் மருத்துவமனை உதவியாளரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2 விடுதிகள் மூடப்பட்டிருந்தாலும், வைத்தியசாலையின் மற்றைய அனைத்து
நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,மேலும் மூடப்பட்ட இரண்டு விடுதிகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட உடன் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும்
வைத்தியசாலையின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan