ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு
உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழிப்பாதை இனி ஒருபோதும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஓமனுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தைக்கும், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் அல்லது மூடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீதான கடற்படை முற்றுகை காரணமாகவே இந்த நீரிணை மூடப்பட்டது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. ஓமனுடனான பேச்சுவார்த்தை இருதரப்பு சார்ந்தது.
ஈரானின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான விவாதங்கள் புதியவை அல்ல; அவை நீண்டகாலமாகவே நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் நலன்கள் மற்றும் கரிசனைகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமியக் குடியரசான ஈரான் செயல்படுகிறது எனவும் மற்றவர்களின் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்குப் பயந்து ஈரான் தனது முடிவை மாற்றிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.
ஊடகங்களின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஈரான் தனது உறுதியான நிலைப்பாடுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று இஸ்மாயில் பாகாயி சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri