ஹோர்முஸ் நீரிணையால் ஐரோப்பாவில் ஏற்படவுள்ள அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.
அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஐரோப்பா முழுவதும் விமான எரிபொருள் (Jet Fuel) கடும் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் என்று ஐரோப்பிய விமான நிலையங்களின் வர்த்தக அமைப்பான ACI Europe எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் எரிசக்தி மற்றும் சுற்றுலாத் துறைக்கு அந்த அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ஐரோப்பா தனது விமான எரிபொருள் இறக்குமதியில் சுமார் 50 சதவீதத்தை வளைகுடா நாடுகளிலிருந்தே பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விநியோகத் தட்டுப்பாடு விமான நிலையச் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிப்பதோடு, ஐரோப்பாவின் பொருளாதாரத்திலும் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானை நோக்கி புறப்பட்டுள்ள இரண்டு ஈரான் விமானங்கள்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கவலையால் ஏற்கனவே பல விமான நிறுவனங்கள் தங்களது விமானச் சேவைகளைக் குறைத்துள்ளன, மேலும் பயணிகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தியுள்ளன.

போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு தொன் 831 டொலராக இருந்த ஐரோப்பிய விமான எரிபொருள் விலை, தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,838 டொலராக உயர்ந்துள்ளது.
இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.