தொடருந்தில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞனுக்கு இழப்பீடு
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் ஹொரபே பகுதியில் தொடருந்தின் மேற்தளத்தில் பயணித்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இன்று திட்டமிடப்பட்டிருந்த 13 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட வர்த்தமானி
தெடருந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் காரணமாக நேற்று (12.09.2023) 119 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி நேற்று இரவு வெளியிட்டார்.
அதேநேரம் பல தொடருந்து நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
