முல்லைத்தீவு செம்மலையில் இடம்பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு!
முல்லைத்தீவு செம்மலை கிராமத்தில் நிலவுகின்ற அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பான தேவை பகுப்பாய்வு கலந்துரையாடல் மற்றும் கிராமத்தில் கல்வியில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.
இதில் பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கௌரவிக்கும் நிகழ்வு
கடந்த வருடம் உயர்தர பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சை உள்ளிட்டவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

செம்மலை கிராமத்தின் விவசாய பிரதேசமான புளியமுனை பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையின் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்கை இடம்பெற்றமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், யானை வேலி அமைப்பது தொடர்பான கள ஆய்வும் இடம்பெற்றது.
இதில் வனவளத் திணைக்களத்தினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.







இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam