30 வருடப் போரில் உயிர்நீத்தவர்களுக்கு செய்யப்பட்ட அகௌரவம்! சபையில் ஜே.வி.பி
அனைவரும் நாடு இறைமையுடன் முன்னோக்கி செல்லவேண்டும் என்பதற்காகவே கடந்த 30 வருடப்போரில் தமது உயிர்களை அர்ப்பணித்தனர், எனினும் இந்த அர்ப்பணிப்புக்களை புறந்தள்ளிவிட்டு அவர்களுக்கு அகௌரவத்தை செய்யும் வகையில் துறைமுக நகர அபிவிருத்தி ஆணைக்குழு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்தக்கருத்தை இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
இந்த துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை கோவிட் வைரஸூக்கு மத்தியில் புதுவருடக்காலத்தில் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயன்றது.
எனினும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் காரணமாக இன்று சட்டமூலத்தை பெரும்பான்மை ஆதரவு அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றவேண்டும் என்ற தீர்மானம் வந்துள்ளது.
இதேவேளை உலக சுகாதார மையம் கோரியமைக்கு அமைய இலங்கை அரசாங்கம் முன்னதாகவே விண்ணப்பித்திருந்தால் கோவிட் தடுப்புசிகளுக்கான தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவசியம் ஏற்படாதிருந்திருக்கும்.
எனினும் ஏனைய நாடுகள் தடுப்புசிகளுக்கு விண்ணப்பித்த பின்னரே இலங்கை விண்ணப்பித்தது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்திருந்த போது தடுப்புசிகளை வழங்க
தமது நாடு தயாராக இருப்பதாக கூறியவேளையில் இலங்கையில்; அஸ்ரா செனகாவுக்கு
இலங்கையின் தேசிய மருந்தாக்கல் ஆணையகம் ஒப்புதலை வழங்கியிருக்கவில்லை என்றும்
விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
