உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு (Photos)
முல்லைத்தீவு - விசுவமடு பிரதேசத்தில் போரில் உயிரிழந்தவர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றையதினம் (25.11.2023) இடம்பெற்றுள்ளது.
மாவீரர்களின் பெற்றோர்கள் சிறப்பாக அழைத்துவரப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பந்தலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான பொது படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதனும் கலந்து சிறப்பித்துள்ளார்.
மல்லாவி பகுதியிலும் கௌரவிப்பு
மல்லாவி பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு மல்லாவி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.
நிகழ்வில் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து பொதுச் சுடரினை மூன்று மாவீரரின் தாயார் ஏற்றிவைத்தார்.
நினைவு படத்திற்கான மலர் மாலையை மூன்று மாவீரரின் தாயார் அணிவித்ததை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் மல்லாவி மற்றும் பாண்டியன்குளம் ,துணுக்காய் பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 17 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
