மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு கௌரவிப்பு நிகழ்வு
மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் விரிவுரையாளரும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான கலாபூசணம் இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தியை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது வாழும்போதே வாழ்த்துவோம் என்னும் தொனிப்பொருளில் நேற்று (21) நடைபெற்றுள்ளது.
வழிபாடுகள்
சிறப்பு அதிதிகளாக இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம், கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் சாந்தி கேசவன்,பேராசிரியர் சி.மௌனகுரு, விவேகாந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் திலகவதி ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது சுவாமி விபுலானந்தரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து மணி மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.



viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
