மின்சார ஊழியர்களின் விடுமுறை இரத்து: ஊழியர் சங்கத்தினரால் வலுக்கும் எதிர்ப்பு
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்யும் சுற்றறிக்கை செல்லுபடியாகாது என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்சார வாரியத்தை இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு விற்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்சார வாரிய மறுசீரமைப்பு
“மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த விற்பனை செயல்படுத்தப்படுகிறது.
மின்சார வாரியத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் ஊழியர்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கம் மின்சாரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என ஜெயலால் தெரிவித்துள்ளார்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |