ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டும் மனைவி எடுத்த வீடியோ காட்சிகள்

Germany Adolf Hitler World
By Mayuri Sep 22, 2023 06:35 AM GMT
Report
Courtesy: பிபிசி தமிழ்

பொதுவாக, வரலாற்றில் கொடும் மனித அவலங்களை, பெரும் இன அழித்தொழிப்புகளை நிகழ்த்திய அரசர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் பல கட்டுக்கதைகள் உலவும்.

அவர்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் நாமும் அவற்றை விரும்பிப் படிப்போம்.

அப்படிப்பட்ட ஒரு தகவல் தான் அடால்ஃப் ஹிட்லரைப் பற்றியதும்.

இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த 1941 - 1945 வரை, 60 இலட்சம் யூத மக்களை வதை முகாம்களில் அடைத்து, அவர்களை கொன்றழித்த இந்த சர்வாதிகாரியைப் பற்றி இதுவரை நாம் அறிந்து வைத்திருந்த பிம்பம் - அவர் தனிமையானவர், சொந்த வாழ்வில் சோகமாகவே இருந்தவர், யாருடனும் அதிகம் பழகாமல் இருந்தவர் என்பது.

இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டும் மனைவி எடுத்த வீடியோ காட்சிகள் | Hitler S Other Side Video Footage Taken By Wife

ஆனால், ஹிட்லரின் மனைவி எவா ப்ரௌன் அவரை தனிப்பட்ட வாழ்வில் எடுத்த வீடியோ காட்சிகள் வேறு ஒரு பிம்பத்தைக் காட்டுகின்றன.

அதில் ஹிட்லர், தனது மனைவியுடன், குடும்பத்தாருடன், நண்பர்களுடன், சிரித்துப் பழகி மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இது ஹிட்லரின் தனிவாழ்வைப் பற்றிய நமது பிம்பத்தை மாற்றுவதாய் அமைந்திருக்கிறது.

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் நிதியமைச்சின் தகவல்

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் நிதியமைச்சின் தகவல்

ஹிட்லர் உண்மையிலேயே நண்பர்கள் இல்லாதவரா?

ஹிட்லரின் மனைவி எவா ப்ரௌன் அவரது தனிப்பட்ட வாழ்கையை எடுத்த இந்த வீடியோ காட்சிகள் 1970களில் வெளியாகின. அப்போது அவை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.

காரணம்: அக்காட்சிகளில் ஹிட்லர் அன்பான, மகிழ்ச்சியாகச் சிரிக்கும் ஒரு மனிதராக வெளிப்படுகிறார். மேலும் அக்காட்சிகள், அவரது நெருங்கிட நட்பு வட்டத்தையும் கொண்டிருந்தார் என்று உலகுக்குக் காட்டின.

இதைப்பற்றிப் பேசும் ஜெர்மானிய வரலாற்றாசிரியரான ஹெய்க கோர்டமேக்கர் (Heike Gortemaker), ஹிட்லர் இருந்த இடம் எப்போதும் மக்களாலும் அவரது நண்பர்களாலும் சூழ்ந்திருக்கும் என்கிறார்.

ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டும் மனைவி எடுத்த வீடியோ காட்சிகள் | Hitler S Other Side Video Footage Taken By Wife

கோர்டமேக்கர் ஹிட்லரைப் பற்றியும் அவரது மனைவி எவா ப்ரௌனைப் பற்றியும் ஆராய்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதியவர். “அவரைச் சூழ்ந்திருந்த ஆண்களும் பெண்களும் அவரை உண்மையாக நேசித்தனர்,” என்கிறார் கோர்டமேகர்.

“அவர்கள் ஹிட்லரின் அரசியல் சித்தாந்ததை நம்பினர், அதனை ஆதரித்தனர். அதை அடைய அவருக்குத் துணைபுரிந்தனர்,” என்கிறார் அவர். ஆனால், ஹிட்லர் நண்பர்களே இல்லாத, தனிமையான, சோகமான மனிதர் எனும் பிம்பம், 1945ல் அவரது மரணத்திற்குப் பிறகு ஜெர்மனி மக்களிடையே பரவியது, என்கிறார் கோர்டமேகர்.

கொலையாளி என்று கூறியதால் சபையில் அமைதியான பிள்ளையான்(Video)

கொலையாளி என்று கூறியதால் சபையில் அமைதியான பிள்ளையான்(Video)

“இப்படி அவரை நண்பர்களற்ற, அன்பு செலுத்த முடியாத, மிருகமாகச் சித்தரிப்பதன் மூலம், அவரிடமிருந்து, நாஜி சித்தாந்தத்திலிருந்து, நாஜிக்கள் செய்த பெரும் குற்றங்களிலிருந்து தங்களை விலக்கிப் புனிதப்படுத்திக் கொண்டனர்,” என்கிறார் அவர்.

ஹிட்லரின் உண்மையான மனநிலை எத்தகையது?

ஆனால் எவா ப்ரௌன் எடுத்த அவரது தனிப்பட வாழ்வின் வீடியோ காட்சிகள் இதனை அசைத்துப் பார்த்தது. ஹிட்லருக்கு தன்னைப் பற்றிய பாதுகாப்பற்ற உணர்வு இருந்தது, என்கிறார் கோர்டமேக்கர்.

“அதனால் அவர் மற்றவர்களைச் சார்ந்திருந்தார். அவருக்கு தனது செயல்கள் அனைத்தும் சரிதான் என்று உறுதியளிக்கும் ஒரு நட்பு வட்டம் தேவைப்பட்டது,” என்கிறார் அவர். “தன்னை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளும் ஒரு நட்பு வட்டம் அவருக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது,” என்கிறார் இந்த வரலாற்றாசிரியர்.

ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டும் மனைவி எடுத்த வீடியோ காட்சிகள் | Hitler S Other Side Video Footage Taken By Wife

மேடையில் பல லட்சம் மக்களுக்கு முன் ஆவேச உரையாற்றிய ஃப்யூரர் ஹிட்லர் (führer), மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தனது நண்பர்களுடன் இருந்த தனிமனிதனான ஹிட்லர் ஆகியோருக்கிடையே மிகப்பெரும் வேறுபாடு இருந்தது என்கிறார் அவர்.

எவா ப்ரௌனின் வீடியோக்களும் ஹிட்லரின் மலை மாளிகையும்

இந்திய அரசிடம் கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை: வலுப்பெற்று வரும் மோதல் நிலை

இந்திய அரசிடம் கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை: வலுப்பெற்று வரும் மோதல் நிலை

ஹிட்லரின் மனைவி எவா ப்ரௌன் அவரது தனிவாழ்வில் எடுத்த ஓசையற்ற வீடியோ படங்கள், பெரும்பாலும், 1930களில், பவாரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஹிட்லரின் மலைவாசஸ்தல விடுமுறை மாளிகையான பெர்க்ஹாஃபில் (Berghof) படமாக்கப்பட்டவை.

தனது சுயசரிதையான மெய்ன் கம்ப்ஃப் (Mein Kamf) நூலின் விற்பனை உரிமைத்தொகையிலிருந்து, 1920களின் இறுதியில் ஹிட்லர் இந்த வீட்டை வாங்கினார், என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டும் மனைவி எடுத்த வீடியோ காட்சிகள் | Hitler S Other Side Video Footage Taken By Wife

ஆரம்பத்தில் இது ஆல்ப்ஸ் மலையில் இருந்த மற்ற வீடுகளைப் போலவே சிறியதாக இருந்தது. ஆனால் 1930களில் இது விரிவடைந்து பெரும் மாளிகையாக மாறியது. இதன் பாதுகாப்புக்காகத் தனி இராணுவ முகாமே இருந்தது.

இவ்வகையில், 1930களில் இருந்து, பெர்க்ஹாஃப், தலைநகர் பெர்லினுக்கு அடுத்தபடியான அதிகார மையமாக உருவெடுத்தது.

எவா ப்ரௌன் ஹிட்லரின் நட்பு வட்டத்தின்மேல் செலுத்திய அதிகாரம்

ஹிட்லர் பெர்க்ஹாஃபிலிருந்துதான் தனது ஆட்சிப் பணிகளை மேற்கொள்ள விரும்பினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்

உலக நாடுகளின் தலைவர்களையும் அங்குதான் சந்தித்தார். பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லெய்னையும், விண்ட்சர் கோமகனையும் அங்குதானவர் சந்தித்தார்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு கோமகனின் மனைவி, ஹிட்லரின் மீதிருந்து தனது கண்களை எடுக்க முடியவில்லை எனவும், ஹிட்லரின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்த முக்கியமான விருந்தாளிகள் யாரும், ஹிட்லரின் காதலியாக இருந்து, அவரது கடைசித் தருணங்களில் அவரைத் திருமணம் செய்துகொண்ட எவா ப்ரௌனைச் சந்திக்கவில்லை.

அதிகாரப்பூர்வ புகைப்படங்களில் அவர் இருக்கமாட்டார். ஆனால், உண்மையில், ஹிட்லரின் வீட்டில், அவர் மிகவும் முக்கியமான, அதிகாரம் பெற்றிருந்த நபர்.

ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டும் மனைவி எடுத்த வீடியோ காட்சிகள் | Hitler S Other Side Video Footage Taken By Wife

“எவா தான் பெர்க்ஹாஃபின் இளவரசி. அவர்தான் அங்கு விருந்து நிகழ்ச்சிகளுக்கு யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்தார். அனைவரும் அவரை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். யாரும் அவரது அதிகாரத்தைக் கேள்வி கேட்கத் துணியவில்லை,” என்கிறார் கோர்டமேக்கர்.

ஆண்டுகள் செல்லச்செல்ல எவா ப்ரௌனின் முக்கியத்துவமும் அதிகரித்தது. பெர்க்ஹாஃபில், அவர் ஹிட்லரின் அந்தரங்க நட்பு வட்டத்தின் மையப்புள்ளி ஆனார்.

அவர் தன் கணவர் தனது நண்பர்களோடு கழித்த தனிப்படத் தருணங்களை எடுத்த வீடியோ காட்சிகள் தான், ஹிட்லர் போன்ற, வரலாறு காணாத மனித அழித்தொழிப்பைச் செய்த ஒரு சர்வாதிகாரிக்கும் நண்பர்கள் இருந்தனர் என்றும், அவர்களோடு அவர் மகிழ்ச்சியான, சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த நாட்களைக் கழித்திருக்கிறார் என்றும், நமக்கு இன்று காட்டுகின்றன.

மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: மகிந்த அமரவீர தகவல்

மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: மகிந்த அமரவீர தகவல்

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ். மானிப்பாய், London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Aberystwyth, United Kingdom, இலங்கை, நியூஸ்லாந்து, New Zealand, New Jersey, United States

08 Aug, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை

08 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Le Blanc, France

09 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US