பிரான்ஸ் இராணுவ சரித்திர அருங்காட்சியகத்தில் சாதித்த முதல் இலங்கை பெண்..!
கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பல சவால்களுக்கு முகங்கொடுத்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள இராணுவ சரித்திரத்தை மீட்டு காட்டியவர் தான் இலங்கையில் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அகிலா கைலாநாதன்.
இவர், லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இத்தனை வருடங்களாக செய்த சாதனைகளையும், தொண்டுகளையும் மனம் திறந்து பேசியதுடன், தற்போது இருக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
இலங்கை - பலாங்கொடை பகுதியில் பிறந்த அகிலா இளையநாதன், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்பு காலப்பகுதியில் பிரான்ஸில் தஞ்சம் புகுந்து, தையல் திறமையை மாத்திரம் வைத்துக் கொண்டு சாதித்துக் காட்டியுள்ளார்.
தற்போது மலையக பகுதிகளில் பல தொண்டு பணிகளை செய்து வரும் இவர், தற்போதைய தலைமுறை பெண்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
ஈழத்தேசத்திற்கு அளவில்லா பெறுமையை சேர்த்த அகிலா இளையநாதன், அவருடைய வாழ்க்கையை எப்படி வெற்றிக்கதையாக மாற்றினார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.
17 வருடங்களுக்கு பின் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் கட்டவிழ்க்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரம்..!