தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயை வாழ்த்தியதால் ஜனாதிபதி அநுரவுக்கு ஏற்பட்ட சிக்கல்
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தமை தொடர்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அண்மையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தனிப்பட்ட வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இன்று கூறியுள்ளது.
விஜய்க்கு மட்டும் வாழ்த்து
"ஒரு நாட்டுத் தலைவர் என்ற முறையில், இதுபோன்ற வாழ்த்துச் செய்திகள் மற்றொரு நாட்டுத் தலைவருக்கே ஒதுக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு மாகாண அல்லது மாநிலத் தலைவர்களுக்கு அல்ல என்று மரபு கூறுகிறது" என அக்கட்சி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதிதாக பதவியேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரிக்கோ அல்லது அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கோ ஜனாதிபதி திசாநாயக்க ஏன் இதேபோன்ற வாழ்த்துச் செய்தியைத் தெரிவிக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
Congratulations to Hon. C. Joseph Vijay on being sworn in as Chief Minister of Tamil Nadu.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) May 10, 2026
Sri Lanka and Tamil Nadu are connected through history, culture, enterprise, and enduring people-to-people ties across generations. Our future holds immense economic promise and…