ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை: தேனுயாவின் முயற்சி (Photos)

Mullaitivu G.C.E.(A/L) Examination Education
By Uky(ஊகி) Oct 04, 2023 06:58 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in கல்வி
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் பழமையான பெரிய பாடசாலைகளில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயமும் ஒன்று. இந்த பாடசாலை பல சாதனையாளர்களை உருவாக்கிய பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது.

விளையாட்டிலும் கல்வியிலும் தொடர்ந்து சாதனைகளை பெற்றுவரும் பாடசாலையின் மாணவர்களின் வரிசையில் தேனுயாவும் இணைந்து கொண்டார்.

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்: ரணிலுடன் இணைந்து போட்ட டீல்

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்: ரணிலுடன் இணைந்து போட்ட டீல்

தேனுயாவின் சாதனை

பாடசாலையின் வரலாற்றில் முதன் முதலில் பொறியியல் தொழிநுட்ப பாடநெறியில் (e - Tec) 2022 க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் முதல் நிலையை பெற்று ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயதிற்கு பெருமையைச் சேர்த்துள்ளார்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை: தேனுயாவின் முயற்சி (Photos) | Historical Achievement Of Ottusuttan Mahavidyalaya

தொழிநுட்ப பாடநெறியானது பாடசாலைகளில் உயர்தரத்தில் அண்மைக்காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடநெறியில் அதிகம் ஈடுபாட்டை மாணவர்கள் காட்டி வருவதனையும் அவதானிக்கலாம்.

A, 2C பெறுபேற்றை பெற்ற செல்வி சதாசிவம் தேனுயா (ச.தேனுயா) பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் தன் வீடும் பெருமளவில் தன் வெற்றிக்கான முயற்சியில் தன்னோடு பங்கெடுத்து வந்திருந்தனர் எனக் குறிப்பிட்டார்.

கோவிட் - 19 மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார அரசியல் தளம்பல் தேனுயாவின் உயர்தர கல்வியில் அதிக நெருக்கடியை ஏற்படுத்தி வந்திருந்தமையை அவருடனான கருத்துப் பரிமாற்றத்தின் போது அறிய முடிந்தது.

தொடரும் உயிரச்சுறுத்தல்கள்: நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சின் செயலாளர் - சபையில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்

தொடரும் உயிரச்சுறுத்தல்கள்: நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சின் செயலாளர் - சபையில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்

கோவிட் - 19 இன் போது போக்குவரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிறைந்த சூழலினால் தொடர்ச்சியான முறையில் தன் கல்வியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அதிக கடினங்களை எதிர் கொண்டதாக குறிப்பிட்டார்.

மேலதிக கற்றலுக்காக தண்ணீரூற்று முல்லை கல்வி நிலையத்திற்கு சென்றுவரும் தேவை இருந்ததாகவும் குறிப்பிட்டார். பாடசாலையின் ஆசிரியர்களில் பாடத்துறை சார்ந்தோர் அக்கறையுடன் செயற்பட்டதையும் அவை உதவியாக இருந்ததையும் தேனுயாவுடனான உரையாடலில் இருந்தது அறிய முடிந்தது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை: தேனுயாவின் முயற்சி (Photos) | Historical Achievement Of Ottusuttan Mahavidyalaya

கல்விக் குடும்பம்

தேனுயாவின் அப்பா கூலித்தொழிலாளியாக வருமானத்தை தேடிவந்து சேர்க்கிறார். அம்மா வீட்டில் இருந்து பொறுப்புக்களை சுமந்து வழி நடத்திச் செல்கிறார். இரண்டு அக்காமாரையும் ஒரு தம்பியையும் உடன் பிறந்தவர்களாக கொண்டவர் தேனுயா.

அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை! நள்ளிரவு முதல் நடைமுறை

அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை! நள்ளிரவு முதல் நடைமுறை

மூத்த அக்கா இருவரும் B - Tec பாடத்துறையில் உயர்தரத்தில் சித்திபெற்று பல்கலைக்கழகத்தில் தங்கள் பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மூத்த அக்கா மாவட்ட நிலையில் மூன்றாம் நிலையில் சித்திபெற்று தற்போது யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் தன் பட்டப்படிப்பை தொடர்கின்றார்.

இரண்டாவது அக்கா உயர்தர பரீட்சையில் மாவட்ட நிலையில் மூன்றாம் நிலையில் சித்தி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை தொடர்கின்றார்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை: தேனுயாவின் முயற்சி (Photos) | Historical Achievement Of Ottusuttan Mahavidyalaya

தேனுயாவின் தம்பி 2022 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரணதரத்தில் பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கின்றார். இவர்கள் அனைவரும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் தங்கள் கல்வியைத் தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வறுமையில் தாங்கிடும் தனவந்தர்களால் மெல்ல நகரும் வாழ்வு

அதிக திறமைகளை வெளிக்காட்டிவரும் வன்னி மாடசாலைகளின் மாணவர்களில் திறமையானவர்களை வறுமை விட்டதில்லை. அப்பா என்ற தனியொருவரின் வருமான ஈட்டத்தினால் படிப்பு மற்றும் குடும்பச் சூழலின் செலவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தமிழர் பகுதியில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது ஆயுதமுனையில் உயிரச்சுறுத்தல்(Video)

தமிழர் பகுதியில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது ஆயுதமுனையில் உயிரச்சுறுத்தல்(Video)

மிக கடினமான சூழலில் மேற்கொண்டு வந்த கல்வி முயற்சிகளை கண்ணுற்று உதவ முன்வந்தார்கள் பலருண்டு. நற்குண முன்னேற்ற அமைப்பினர் மாதாந்தம் 4000/= என்ற உதவித் தொகையை தங்கள் வங்கிக்கணக்கிற்கு வரவிடுவதாகவும் அது போல் அக்காக்களின் பல்கலை கற்றலுக்காக சிறிதளவு உதவி கிடைப்பதாகவும் தேனுயா பேசியிருந்தார்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை: தேனுயாவின் முயற்சி (Photos) | Historical Achievement Of Ottusuttan Mahavidyalaya

விளையாட்டில் சிறந்த ஈடுபாட்டைக் காட்டி வரும் தேனுயாவின் தம்பி கைப்பந்து விளையாடில் தேசிய மட்டத்தில் கடந்த இருவருடங்களாக கலந்துகொண்டு வருகின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தேனுயாவினதும் அவரது சகோதரர்களினதும் கல்வியை சிறப்பாக முன்னெடுப்பதற்காக மேலதிகமான நிதியுதவிகள் தேவைப்படுவதை அறிந்துகொள்ள முடிந்தது.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US