இலங்கை மருத்துவத் துறையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை (Video)
எமது பிரதேசத்தில் இருக்கும் வளங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே நாம் மிகப் பெரிய சாதனையைப் படைக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் 13 தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ் மாணவி தர்ஷிகா தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ். இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பட்டமளிப்பு விழாவின் போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல் நிலையாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரின் இந்த சாதனை தொடர்பில் எம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் காணொளி வாயிலாக,