நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட வரலாற்று உரை!
இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக மாற்று திறனாளியான முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, தனது கன்னி உரையை ஆற்றியுள்ளார்.
அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவை 7ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து 10ஆயிரம் ரூபாவரை நிச்சியமாக அதிகரிப்போம் என அவர் நேற்று (06.12.2024) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
விசேட தேவையுடையவர்கள்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “விசேட தேவையுடையவர்கள் என்பது இந்த உலகுக்கு அழகை கொண்டுவந்த தூதுக்குழுவினராகும்.
பன்முகத்தன்மையின் அடிப்படையிலேயே வர்ணமயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
உங்கள் மத்தியில் கண் பார்வை அற்ற என்னால், இந்த இடத்தில் பன்முகத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மனித சமூகத்தில் வர்ணமயங்கள் ஏற்பட்டிருப்பது இந்த பன்முகத்தன்மையினால் ஆகும். இது என்னுடைய கன்னி உரையாகும்.
அதேபோன்று இது வரலாற்று கதையாகும். இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் 76 வருடங்களுக்கு பின்னர் விசேட தேவையுடைய ஒருவருக்கு நாடாளுமன்ற வரம் கிடைத்திருக்கிறது.
இந்த வரம் தற்செயலாகவோ வேறுமனே கிடைத்த வரம் அல்ல. இதற்காக பாடுபட்ட குழுவொன்று இருக்கிறது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



