ஜனவரி முதல் சிறுவர்கள் தொடர்பில் புதிய சட்டம்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களை, விளம்பரங்களுக்காக பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் அசங்க விஜேமுனி இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளம்பர பிரசார நடவடிக்கை
குறிப்பாக 12 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியர் விளம்பர பிரசார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படுவதனை நாம் ஜனவரி மாதம் 1ம் திகதியுடன் நிறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்கள் கடந்த 7 – 8 ஆண்டுகளாகவே இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நடைமுறையை எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்வதாக பிரதி அமைச்சர் அசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
