சூடானில் ட்ரோன் தாக்குதல்! மூவர் பலி
சூடானின் தென் கோர்டோப மாகாணத்தில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எஃப் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில், இந்நாட்டில் தொடரும் உள்நாட்டுப் போரின் கோர முகத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கடுகிலி மற்றும் தில்லிங் நகரங்களை நோக்கிச் சென்ற லொறிகள் மீது கர்டாலா (Kartala) பகுதியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கண்டனம்
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அப்பட்டமாக மீறி, வேண்டுமென்றே மனிதாபிமானப் பணியாளர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சூடான் மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்குள் உதவிப் படைப் பிரிவினர் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். தென் மற்றும் வட கோர்டோபன் மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஃப் மற்றும் சூடான் இராணுவம் கடும் போரிட்டு வருகின்றன.
இனப்படுகொலையின் அறிகுறி
கடுகிலி நகரம் தற்போது ஆர்.எஸ்.எஃப் படையினரின் முற்றுகையில் உள்ளது. தில்லிங் நகரம் சமீபத்தில்தான் இராணுவத்தால் மீட்கப்பட்டாலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னமும் ஆபத்து நிலவுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், வட டார்பூர் மாகாணத்தின் எல்-பாஷர் நகரில் ஆர்.எஸ்.எஃப் படைகள் நடத்திய தாக்குதல்கள் 'இனப்படுகொலையின் அறிகுறிகளை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri