ஹிருணிகாவால் அதிரடியாக நீக்கப்பட்ட 15 அமைப்பாளர்கள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர(Hirunika Premachandra), 15 கிளை உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ஆதரவளிக்காமல் வேறு ஒரு வேட்பாளரை ஆதரித்தவர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், கட்சியின் யாப்புக்கு அமைய அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலைவருக்கு அறிவிக்க நடவடிக்கை
எனினும், இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீக்கப்பட்ட பிரதேச அமைப்பாளர் பிரேமரஞ்சித் பெரேரா, அமைப்பாளரைத் தன்னிச்சையாக நீக்கியதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் கட்சித் தலைவருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |