அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) நேற்று (19) தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரிசி இறக்குமதி
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது.
அரிசி இறக்குமதியை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய கால அவகாசம் இன்று (20) நள்ளிரவு 12 .00 மணியுடன் நிறைவடைகிறது.
கால அவகாசம்
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாவிட்டால், இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பை மீண்டும் ஏற்றுமதி செய்ய நேரிடும் என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்திருந்தார்.
கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியதையடுத்து இதுவரை தனியார் துறையினர் 35,600 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளனர்.
அந்த அரசி தொகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் , மேலும் 16,000 மெற்றிக் தொன் சிவப்பரிசியும் இருப்பதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |