ஜனாதிபதியின் விசேட திட்டம்! வெளியான வர்த்தமானி
Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய பணியை தொடங்குவதே இதன் நோக்கமாகும்.

மேலும், சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மை மற்றும் அரசு இயந்திரங்களை வலுப்படுத்த ஒரு மாற்றும் முயற்சி தேவைப்படுவதால், அவற்றை அடைவது இதன் மற்றொரு நோக்கமாகும்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “Clean Sri Lanka” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செயலணியில்,
01 என். எஸ். குமாநாயக்க – ஜனாதிபதியின் செயலாளர்
02. இராணுவத் தளபதி
03. கடற்படைத் தளபதி
04. விமானப்படைத் தளபதி
05.W. L. A. சமன் பிரியந்த – பதில் பொலிஸ் மா அதிபர்
06. பொறியியலாளர் குமுது லால் டி சில்வா – தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபை
07. ஐ. எஸ். ஜயரத்ன
08. கிஹான் டி சில்வா
09. சந்தியா சல்காது
10. கலாநிதி காமினி பட்டுவிட்டகே
11. கலாநிதி அனுருத்த கமகே
12. தில்ருக் வனசிங்க
13. தீபால் சூரியராச்சி
14. சிசர அமர பந்து
15. கிரிஷாந்த குரே
16. ஜயது பெரேரா
17. ருவான் வீரசூரிய
18. தயான் கருணாரத்ன ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒருவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri