மனைவி மரணம் - நாடகமாடிய கணவன் கைது - பொய் சாட்சி வழங்கிய மகன்
இரத்தினபுரி, கஹவத்தையில் உயிரிழந்த மனைவியின் மரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கிய 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உடலை, குளித்ததனை போன்று செய்து துண்டு ஒன்றை உடலில் கட்டி மரணத்தை மறைக்க முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் கணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் கைது
பொலிஸாரின் விசாரணையில், மின்சாரம் தாக்கியதற்கான காரணத்தை மறைக்க, இறந்த பெண்ணின் உடலில் ஈரமான ஆடைகளை அணிவித்து, சடலத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

17ஆம் திகதி பிற்பகல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பிள்ளைகளின் தாயான செனரத் சந்திரலதாவின் பிரேத பரிசோதனையின் போது உண்மை தகவல் வெளிவந்துள்ளது.
அலறல் சத்தம்
சாட்சியமளித்த உயிரிழந்த பெண்ணின் கணவர், குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்த தனது மனைவி பலத்த அலறல் சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்று சோதனையிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அப்போது மனைவி கீழே கிடந்ததாக குறிப்பிட்டுள்ளார். தந்தைக்கு ஆதரவாக 20 வயது மகனும் பொய் சாட்சியம் வழங்கியுள்ளார்.
விசாரணையின் போது விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கியமையே மரணத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri