ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்.. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

Kurunegala Sri Lanka Police Investigation Fire Social Media
By Sajithra Jul 16, 2026 12:25 AM GMT
Report

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கியை பிடுங்கி அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடி கைது

பொலிஸாரின் துப்பாக்கியை பிடுங்கி அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடி கைது

உரிய ஆதாரங்கள்.. 

இந்த சம்பவத்திற்கு அங்கு நின்ற 8 வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்.. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல் | Kurunegala Child Car Virul Video Police Report

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்த காரின் அருகே நடந்து சென்றதும் பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேயின் மனைவி - பிள்ளைகள் எங்கே! அரசியல்வாதிகள் தலைமறைவு

சுரேஷ் சலேயின் மனைவி - பிள்ளைகள் எங்கே! அரசியல்வாதிகள் தலைமறைவு

அநுர சிறைக்குச் சென்றாலும் பெரும் ஆபத்து - யாரும் அறியாத திகில் நிமிடங்கள்..!

அநுர சிறைக்குச் சென்றாலும் பெரும் ஆபத்து - யாரும் அறியாத திகில் நிமிடங்கள்..!

Gallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US