இந்து பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள்

Mavai Senathirajah Ranil Wickremesinghe President of Sri lanka
By Kajinthan Jan 07, 2024 08:07 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து இந்து பிரதிநிதிகள் சிலர் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் நேற்றைய தினம் (06.01.2024) ஊடக அறிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

அதில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் ஐயா, சிவ பூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன், சிவ சேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்ட வேண்டுகோளை இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சிவபால தேசிகர், செயலாளர் சிறீந்திரன் ஆகியோர் ஜனாதிபதியிடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேரில் கையளித்தனர்.

யுக்திய நடவடிக்கையின் அடுத்தகட்ட செயற்பாடு: வாகனங்களை குறி வைக்கும் பொலிஸார்

யுக்திய நடவடிக்கையின் அடுத்தகட்ட செயற்பாடு: வாகனங்களை குறி வைக்கும் பொலிஸார்

1. மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருக

2. பசுவதை தடைச் சட்டம் கொண்டு வருக

3. இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமைச் சமயம் ஆக்குக ஆகிய மூன்று வேண்டுகோள்களை அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் ஜனாதிபதியாக ரணில் பொறுப்பேற்ற பின் இந்துக்களின் வேண்டுகோளை ஏற்று ரணில் செய்த 10 நன்மைகளையும் பாராட்டி இருந்தனர்.

இந்து பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள் | Hindus Appeal To The President In Person

பாராட்டும் வரிகள் பின்வருமாறு

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்

உங்கள் ஆட்சிக் காலத்தில்

1. திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தாரின் புத்த மேலாதிக்க அடாவடித்தனத்தை நிறுத்தினீர்கள்.

2. வெடுக்குநாறி மலையில் உடைந்த சைவத் திருவுருவங்களை மீண்டும் நிறுவ வழி செய்தீர்கள்.

3. மதமாற்றி ஒருவர் மாவட்டச் செயலாளராக யாழ்ப்பாணம் வருவதைத் தடுத்தீர்கள்.

4. மதமாற்றுவதற்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற மதம் மாற்றிகளை திருப்பி அனுப்பியும் தடுத்து நிறுத்தியும் நடவடிக்கை எடுத்தீர்கள்.

5. செல்வாக்கான செல்வந்தரான மதமாற்றி செரோம் பெர்ணாந்து, இந்துக் கடவுளரைப் பழிக்கும் செவி கய்க்கும் சொற்களைச் சொன்னதற்காக இந்துக்களின் வேண்டுகோளை ஏற்றுச் சிறையில் அடைத்தீர்கள்.

மீண்டும் அரசியலில் களமிறங்கும் சந்திரிக்கா

மீண்டும் அரசியலில் களமிறங்கும் சந்திரிக்கா

6. மன்னார் மாவட்டத்தில் சைவ சமயத்தவரை மாவட்டச் செயலாளர் ஆக்கினீர்கள்.

7. குடியரசுத் தலைவர் மாளிகையில் தீபாவளி நாள்களில் நந்திக் கொடியைப் பறக்க விட்டீர்கள்.

8. புத்த தீவிரராகப் புத்த சமயத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி, இந்து சமயத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்திய தொல்லியல் துறை ஆணையர் விலக வழி வகுத்தீர்கள்.

9. பகவத் கீதைக்கான உலக மாநாட்டையும் சமஸ்கிருத மொழிக்கான உலக மாநாட்டையும் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறீர்கள்.

10. இந்து சமய வழிபடு பயணிகளுக்காகக் காங்கேயன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஏற்றினீர்கள்.

இவ்வாறாக நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு இந்து சமயத்தவர் முன்பிருந்ததை விட மன உறுதியும் வலிமையும் உள்ளவர்களாக இருப்பதற்கு நடவடிக்கைகள் சில எடுத்துள்ளீர்கள். அவை போதாது.

இந்து பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள் | Hindus Appeal To The President In Person

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேலும் பல நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். பாராட்டிய பின் பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்

1. இந்து சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை

2. மதமாற்றத் தடைச் சட்டம்

3. பசுக் கொலைத் தடைச் சட்டம் இம் மூன்றையும் உங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் பேணவும் போற்றவும் ஆவண செய்வீர்களாக.

வாகனம் - காணி கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்

வாகனம் - காணி கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்

இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுப்பீர்களானால் இந்துக்களின் வாக்கு வங்கி ஆதரவை உங்களுக்காகப் பெற்று தருவோம் என மறவனபுலவு க.சச்சிதானந்தன் ஜனாதிபதியிடம் நேரில் கூறினார்.

இலங்கை சிவபூமி. இலங்கையின் ஆதிசமயம் சைவ சமயம். சைவர்களோடு சேர்ந்து புத்தர்களும் விஷ்ணுவை சிவனை உமையை கண்ணகியை கல்வி செல்வம் வெற்றிகான அம்மன்களை விநாயகரை முருகனை வழிபடுகிறார்கள்.

இந்துக்கள் இந்த நாட்டில் உரிமையோடு வாழ்வதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள். இலங்கை சிவ பூமி என்பதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிஙங்க அனைத்து சமய பேராளரிடமும் குறிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடும் நெருக்கடியில் மக்கள்: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கூறும் விடயம்

கடும் நெருக்கடியில் மக்கள்: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கூறும் விடயம்

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US