பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து பெண்
பாகிஸ்தான் நாடளுமன்ற பொதுத்தேர்தலில் முதல் முறையாக இந்துப்பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் 16 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 2024 பெப்ரவரி 8ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண்
இதனூடாக பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப்பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார்.

அதேவேளை கடந்த 2022ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற சவீரா, தனது படிப்பை முடித்தவுடன் அரசியல் களத்தில் நுழைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்பதே முதல் முன்னுரிமை. எனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri