இந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு வருகை தந்த ஆதீனங்கள்
வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு ந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் தற்போது நடைபெற்றுவரும் சிவராத்திரி நிகழ்விற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதன்போது நேற்றையதினம் சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம்,103வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கியுள்ளார்.
பெருமளவிளான பக்தர்கள்
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.
7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது பதிகங்கள் பாடியுள்ளார்.
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.