அநுரவை சந்தித்த ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர்
ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெலருக்கும் (Ben Mellor) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (06.05.2024) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னனி தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
புவி அரசியலில் நிலவும் சவால்கள்
இதன்போது இலங்கையின் நடப்பு பொருளாதார, அரசியல் நிலைமைகள், பிராந்திய புவி அரசியலில் நிலவும் சவால்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி ஹுமைரா ஹாசியா ( Humairaa Hatia), இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் என்ருவ் பெட்றிக் (Andrew Patrick) மற்றும் முதலாவது செயலாளர் டொம் சொப்பர் (Tom Soper) தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |