குளக்கோட்டைமன்னன் காலத்தில் நிறுவிய ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை (Photos)
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆதிசிவன் ஆலயத்தில் சிவலிங்கமும் விநாயகர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எல்லை கிராமமான தோணிதாட்டமடு கிராமத்தை காக்கும் குளக்கோட்டை மன்னன் காலத்தில் நிறுவிய ஆதிசிவன் ஆலயத்தில் மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ப சிவலிங்கமும் விநாயகர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
விக்கிரகம்
அருள்மிகு 108 சிவலிங்க நாகலிங்கேசுவரர் உடனருள் நாகலிங்கேசுவரி சிவாலய சிவபூமியின் தலைமை அருட்சுனைஞரும் நிறுவனருமான சிவத்திரு இ. ரமேசுகுமாரனால் சிவலிங்கமும், உலகெலாம் சிவமயம் ஆன்மீக குருபீடத்தின் நிறுவுனர் சிவத்திரு உயிரொளி சிவகுகனாரினால் விநாயகர் விக்கிரகமும் வழங்கப்பட்டுள்ளது.
கடவுள் மங்கல நன்னீராட்டு தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பு, சைவத்தமிழ் குருபீடம் அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் போன்ற வழிபாட்டு அமைப்புக்களின் செந்தமிழாகம அருச்சுனைஞர்களினால் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு யாக பூஜை மற்றும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்து ஆன்மீகம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சகிதம் கலந்து கொண்டு எல்லை கிராமங்களை பாதுகாக்கும் வகையிலும் இந்து ஆன்மீகம் அழியாத வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.




