76 வருடங்களாக மலையக மக்களை அடிமைப்படுத்தும் தலைமைத்துவம் - அரச தரப்பு கேள்விகளுக்கு ஜீவன் தொண்டமான் பதிலடி

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Jeevan Thondaman NPP Government
By Malaivanjan Sep 23, 2026 07:30 PM GMT
Report

கடந்த 76 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார்.

கடந்த காலங்களில் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்பில் வரலாற்று ரீதியான பல விடயங்களை முன்வைக்க முடியும் என குறிப்பிட்ட அவர் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

1983 முதல் 1987 வரையான காலப்பகுதியில், குறித்த கேள்வியை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரின் தந்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மாவட்டத் தலைவராக செயற்பட்டதாகவும், அவரது மூத்த சகோதரர் ஒருவர் தோட்டக் கமிட்டித் தலைவராக செயற்பட்டதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

76 வருட அரசியல்

அதேபோன்று, அவரது சகோதரி ஒருவருக்கு சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் அரச நியமனம் ஊடாக தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பிறந்த ஊரில், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இரண்டு மாடி பாடசாலைக் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும், ஆறுமுகம் தொண்டமான் காலத்திலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

76 வருடங்களாக மலையக மக்களை அடிமைப்படுத்தும் தலைமைத்துவம் - அரச தரப்பு கேள்விகளுக்கு ஜீவன் தொண்டமான் பதிலடி | Hill Country Undeveloped For 76 Years

முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானால் குறித்த பாடசாலைக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சென். மார்க்ரட் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களை விடுவித்து, பாதுகாக்க சௌமியமூர்த்தி தொண்டமான் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இவை ஒரு சில உதாரணங்கள் மாத்திரமே எனத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், கடந்த காலத்தைப் பற்றி கேள்விகள் எழுப்பப்படும் போது அதற்கான வரலாற்று உண்மைகளையும் தன்னால் முன்வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

எனினும், தாம் யாரையும் குறை கூறுவதற்காக இதனை தெரிவிக்கவில்லை என்றும், கடந்த கால யதார்த்தங்களை புரிந்துகொண்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக மக்களின் எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையருக்கு..

இதேவேளை, வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக, குறித்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விடயத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் அரசாங்கம் பொறுப்புடன் கையாளுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக அந்த நாட்டின் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஒரு தனிநபரின் பிரச்சினையாக மாத்திரம் பார்க்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

76 வருடங்களாக மலையக மக்களை அடிமைப்படுத்தும் தலைமைத்துவம் - அரச தரப்பு கேள்விகளுக்கு ஜீவன் தொண்டமான் பதிலடி | Hill Country Undeveloped For 76 Years

அரசாங்கமும், ஒரு நாடாக இலங்கையும் ஒன்றிணைந்து, குறித்த நபருக்கு தேவையான சட்டரீதியான உதவிகளை வழங்குவதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவருக்கு ஆதரவாக செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அதேவேளை இது வெளிவிவகாரம் தொடர்பான முக்கியமான சர்வதேச விவகாரம் என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதன் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயத்தை அரசியல் மயமாக்காமல், வெளிவிவகார அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாத வகையில் பொறுப்புடன் கையாள வேண்டும். அரசாங்கம் இந்த விவகாரத்தை கையாள்வதற்கு எதிர்க்கட்சியாக தாமும் தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.

மலையக மக்களின் பிரச்சினைகள் 

இதனிடையே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முன்வைத்து வருவதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

76 வருடங்களாக மலையக மக்களை அடிமைப்படுத்தும் தலைமைத்துவம் - அரச தரப்பு கேள்விகளுக்கு ஜீவன் தொண்டமான் பதிலடி | Hill Country Undeveloped For 76 Years

டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, பெருந்தோட்டங்களின் குத்தகைக் காலத்தை நீடித்தல், வீட்டு உரிமை மற்றும் காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களிடம் எதிர்பார்க்கப்படும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளன.

எனவே, சம்பள அதிகரிப்பு தொடர்பான அரச வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும் இதுவரை குறித்த அரச வர்த்தமானி வெளியிடப்படவில்லை என்றும் ஜீவன் தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் பின் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள் - நீதிபதியை மிரட்டும் குற்றவாளிகள்

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் பின் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள் - நீதிபதியை மிரட்டும் குற்றவாளிகள்

மட்டேகொடையில் பயங்கர தீ விபத்து – ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான சொத்துகள் நாசம்

மட்டேகொடையில் பயங்கர தீ விபத்து – ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான சொத்துகள் நாசம்


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US