தென்னிலங்கையின் விருந்தகம் மீது தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தென்னிலங்கையின் ஹிக்கடுவ, நாரிகம பகுதியில் கடற்கரை விருந்தகம் ஒன்றின் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் நான்கு பேரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நான்கு நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் சென்ற இந்தக் குழுவினர், மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விரட்டியடித்து, உணவகத்தின் உடைமைகளுக்கும், நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
தகவலின் பேரில், ஹிக்கடுவ காவல்துறையினர்; சந்தேக நபர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கைக்குண்டு மற்றும் இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பெப்ரவரி 28-ம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



