மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி வெற்றிகரமாக முன்னெடுப்பு (Video)
"வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட" எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (02.03.2023) யாழ்ப்பாணத்தில் குறித்த நடைபவனி இடம்பெற்றது.
யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பித்த நடைபவனி யாழ். நகர்ப் பகுதியை சுற்றி மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்து பேருந்து ஊடாக யாழ். நகரிலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்டது.
இந்த நடைபவனியில் மதத்தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகள், நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி
வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப்பொருளில் தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம் நிகழ்வின் இன்று இரண்டாம் நாள் கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்டுள்ளது.
தலைமன்னார் தொடக்கம் மாத்தனை வரையான நடை பயணத்தில் நாளை ( 04.08.2023 ) இணைந்துகொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்படட இந்த நடை பயணம் முல்லைத்தீவு புதுகுடியிருப்பில் ஆரம்பித்து கிளிநொச்சி வவுனியா ஊடாக மதவாச்சியில் பிரதான நடை பயணத்துடன் இணைந்துகொள்ளவுள்ளது.
இன்றைய கிளிநொச்சி நடைபயணத்தில் ஏற்பாட்டாளர்களுடன் சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியில் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா
"வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட" எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி வவுனியாவை வந்தடைந்தது.
இன்று பிற்பகல் பசார் வீதியில் ஆரம்பித்த பேரணி நகரின் ஊடாகச் சென்று வவுனியா பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்து கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்த நடைபவனியில் மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, மலையக மக்களும் இந்த நாட்டின் மக்களே, மலையக மக்கள் இலங்கை தேசிய இனம், மலையக மக்களை ஏமாற்றாதே, லயன் குடியிருப்புக்கள் வேண்டாம் எனவும் கோசங்களையும் எழுப்பினர்.
செய்தி- திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

















கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
