அமெரிக்காவில் இடம்பெற்று வரும், அதிக பதவி விலகல் அவுஸ்திரேலியாவிலும் பின்பற்றப்படலாம்
அமெரிக்காவில் இடம்பெற்று வரும், அதிக பதவி விலகல் (great resignation) என்ற அனைத்து வகையான தொழில்களிலிருந்தும் விலகும் செயற்பாடு அவுஸ்திரேலியாவிலும் பின்பற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் வருவாய் கணக்கெடுப்பின்படி, 4.3 மில்லியன் மக்கள் தங்கள் பணிகளை விட்டு விலகினர்.
இது முன்னணி தொழிலாளர்கள் முதல் சிரேஷ்ட நிர்வாகிகள் வரை அனைவரையும் உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலக அளவில் 40 சதவீத பணியாளர்கள் இந்த ஆண்டு தங்கள் தொழில்களில் இருந்து விடைபெறுவதை பரிசீலிப்பதாக மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
பணியிடங்களில் உரிய வெகுமதி, கோவிட் காலத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றியமை மற்றும் அங்கீகாரம் கிடைக்காமையை இதற்கான காரணம் என்று அவுஸ்திரேயாவின் பெண் நிர்வாகி ஒருவரை கோடிட்டு news.Com என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான கார்ட்னரைச் சேர்ந்த விஞ்ஞானி ஆரோன் மெக்வானின் (Aaron Mcquahn) கருத்துப்படி, “அதிக பதவி விலகல்” என்ற செயற்பாடு அவுஸ்திரேலிய, தொழில் கொள்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆய்வின் போது ஐந்து பேரில் மூன்று பேர் வரை பணிகளை மாற்ற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.