கொழும்பின் பல பகுதிகளில் தீவிர பாதுகாப்பு - பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சுமார் 750 பேர் குழப்பம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பாதுகாப்பு
கொழும்பில் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெறும் உரிய தகவல்களுக்கு அமைய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW