சிறார்கள் தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவு
குற்றத்துக்காக கைது செய்யப்படும் சிறார்களை நடத்துவது குறித்து அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை பிறப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, பொலிஸாரால் காவலில் எடுக்கப்பட்ட எந்தவொரு சிறாரையும் கைது செய்யப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் காண்பிக்க வேண்டும்.
உத்தரவு
நீதவானிடம் முன்னிலைப்படுத்துவதற்கு முன்பு அவர்களை பெற்றோரிடம் காட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்ட நடைமுறையாக்க அமைப்பிற்குள் சிறுவர்களின் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதையும், சட்ட செயல்முறைகளின் போது சிறார்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதையும் இந்த உத்தரவு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
