ஜனாதிபதி தொடர்பில் சந்தோஷ் ஜா தெரிவித்த கருத்து
ஜனாதிபதி அநுரகுமாரவின் வழிகாட்டலில் நாடு அபிவிருத்தியை நோக்கி செல்வதோடு, மகிழ்ச்சி மிக்க மக்களாக மற்றும் செல்வ செழிப்பான வாழ்க்கையை நோக்கி நகர்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 2025.10.12 ஆம் திகதி பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டன.
நீண்டகால நட்புறவு
இந்நிகழ்வில் உரையாற்றிய சந்தோஷ் ஜா, "இன்றைய தினம் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம் வரலாறு முழுதும் இலங்கை, இந்தியாவுக்கிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் சகோதரத்துவத்தின் இலட்சினையாகும்.

நாங்கள் உறவினர்கள், நாகரிகத்தின் உச்சத்தை தொட்ட சகோதரத்துவத்தைக் கொண்டவர்கள். நாங்கள் இப்போது எதிர்பார்ப்பது, கடந்த காலத்தைவிட மிகத் தெளிவான கௌரவமான எதிர்காலமாகும்.
எங்களின் இலக்கு பொருளாதார மற்றும் சமூகத்திற்கு தேவையான உயர்வான அபிவிருத்தியை மலையக மக்களுக்கு வழங்குவதாகும். இந்த பயணத்தில் இந்தியா - இலங்கை அரசுடன் ஒன்றிணைந்து வீடமைப்பு, கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்தியை நோக்கி தொடர்வதாகும்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |