இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு கடன் மறுசீரமைப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஜப்பானிய தூதுவர்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பாதையில் கடன் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் மிகவும் கடுமையானதாகக் கருதப்படும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பன்முகத் தன்மையில் நாடு எதிர்கொள்ளும் சவால்களின் சிக்கலான தன்மையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியானது அதன் கடன் நிலைத்தன்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு விரிவான அணுகுமுறையை அவசியமாக்கியுள்ளது.
ஜப்பானின் உறுதிப்பாடு
எனினும் பாரிஸ் கிளப்பின் பகுதியாக இல்லாத சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொண்ட பாரம்பரிய வழிகள் போதுமானதாக இருக்கவில்லை.
இதனையடுத்து, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவை ஆரம்பிக்க முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனவே, பேச்சுவார்த்தைகளை எளிதாக்குதல் மற்றும் முயற்சிகளை முன்னெடுப்பதில் ஜப்பானின் இந்த ஈடுபாடு கடந்த நவம்பரில் உடன்படிக்கையை எட்டியது.
இந்தநிலையிலேயே இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் ஜப்பானின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

இஸ்ரேலுக்கு உதவியதால் அமெரிக்காவின் சேதமடைந்த ஏவுகணை அமைப்புக்கான செலவு ரூ 17,000 கோடி News Lankasri
