தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதல்: இஸ்ரேலியப் படைகளுடன் ஹிஸ்புல்லா நேரடி மோதல்
தெற்கு லெபனானின் டெய்ர் சிர்யான் மற்றும் சௌதார் நகரங்களுக்கு அருகிலுள்ள வாடி ராஜ் பகுதியில், ஊடுருவ முயன்ற இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே கடுமையான தரைவழிப் போர் வெடித்துள்ளதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம்(NNA) தெரிவித்துள்ளது.
இந்த இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு நேரடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறதாக குறிப்பிடப்படுகிறது.
தீவிரமடையும் தரைவழி தாக்குதல்
அத்துடன், இஸ்ரேலியப் படைகள் லெபனான் எல்லைக்குள் முன்னேற முயன்றபோது, அங்கு மறைந்திருந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் வழிமறித்துத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போது வரை நீடித்து வரும் இந்தப் போரில் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அத்துடன், காசா போரைத் தொடர்ந்து தற்போது லெபனான் எல்லைப் பகுதியிலும் தரைவழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.