போர் நிறுத்தத்திற்கான ஹிஸ்புல்லாவின் அழைப்பு: அமெரிக்கா வெளிப்படை
இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான ஹிஸ்புல்லாவின் அழைப்பானது, தாக்குதலில் இருந்து பின்வாங்கும் நிலையை எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் துணைத் தலைவர் நைம் காசிம் நேற்றையதினம் இடம்பெற்ற ஒரு தொலைக்காட்சி நேரலையில் “ஈரான் ஆதரவுக் குழுவின் திறன்கள் அப்படியே இருப்பதாகவும் எனினும் அதன் வீரர்கள் இஸ்ரேலின் தரைவழி ஊடுருவல்களில் சற்று பின்வாங்குகின்றனர் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பதில் வழங்கும் போதே மேத்யூ மில்லர் மேற்படி கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஹிஸ்புல்லா அமைப்பு
"ஒரு வருடமாக, இந்த போர்நிறுத்தத்திற்கு உலகமே அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஹிஸ்புல்லா அமைப்பு அதனை முற்றாக மறுத்திருந்தது.
இப்போது ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல் மேலோங்கியுள்ளதால் இவ்வாறான சாதகமான கருத்துக்கள் வெளிவருகின்றன.
இந்த மோதலுக்கு இராஜதந்திர தீர்வை நாங்கள் தொடர்ந்து விரும்புகிறோம்.
அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்க அதிகாரிகள் லெபனானுக்குள் இருக்கும் வெவ்வேறு வீரர்களுடன் அடிக்கடி இடைத்தரகர்கள் மூலம் உரையாடுகிறார்கள்.
அவற்றை பொதுவெளியில் விளக்கப்படுத்துவது சாதகமில்லாத ஒன்று" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |