போதைப்பொளுக்கு அடிமையானவருக்கு ஒரு நாளில் இத்தனை ஆயிரம் ரூபா தேவையா?
இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களின் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இதனையடுத்து போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினா் வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அண்மைய வாரங்களில், போதைப்பொருட்களுக்கு அடிமையானவா்கள் தொடா்புடைய திருட்டுச் சம்பவங்கள், நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவா்களால், தனியார் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளைகள் இடம்பெறுகின்றன.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 80,000 ஆக இருந்தது.
எனினும் தற்போது அது 120,000 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு சிறிய பக்கட் ஹெரோய்ன் விலை 3,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினா் கண்டறிந்துள்ளனா்.
தரவுகளின்படி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு பக்கெட் போதைப்பொருள் தேவைப்படுகின்றன..
இதன்படி நாளொன்றுக்கு போதைக்கு அடிமையானவா் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா தேவை என்ற நிலையில் 30 நாட்களில், அவருக்கு இந்த 180,000 ரூபா தேவைப்படுகிறது.
எனவே இந்தப்பணத்தை பெற்றுக்கொள்வதற்காக போதைக்கு அடிமையானவா்கள், வழிப்பறிகளிலும், கொள்ளைகளிலும் ஈடுபடுகின்றனா்.
இந்தநிலையில் போதைப்பொருளுக்கு எதிரான பாரிய நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, குறிப்பாக இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று காவல்துறையினா் சுட்டிக்காட்டியுள்ளனா்.