போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது (Video)
அம்பாறை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது நடவடிக்கை நேற்று(13) கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கை
அம்பாறை- கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 3 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யபட்ட சந்தேகநபர் நிந்தவூர் 9 பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்கவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் நிந்தவூர் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
