தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்: சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கானது நேற்று(16.03.2026) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேயிலை பையில் இருந்த போதைப் பொருள்
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொருட்களை தேயிலை பைகளில் வைத்து நீண்டகாலமாக கடத்தி வந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கைது செய்துள்ளனர்.

இதன் போது, 48 வயது மதிக்கத்தக்க கைதான குறித்த சந்தேக நபர் வசம் இருந்து தேயிலை பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஹெரோயின் பக்கற்றுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam