ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் பிரித்தானியா! ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி
உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்,ரஷ்ய போர் குறித்து ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது.

உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவி
இந்நிலையில், உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நேரடியாக வழங்கி வருகின்றது.

இந்த நிலையில் ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் படைகளை திரட்ட ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ள நிலையில், உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை எனவும் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam