கினிகத்தேனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கனரக வாகனம் விபத்து!
கினிகத்தேனை- கடவல பகுதியில் கனரக வாகனமொன்று பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 50 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(25.11.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சாரதி காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொழும்பிலிருந்து ஹட்டன் நகர் நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
12 தொன் புன்னாக்கை ஏற்றிச் சென்ற ஒரு கனரக வாகனமே சுமார் 50 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளம் கொண்ட தேயிலைத் தோட்டத்தில் விழுந்து நின்றதாக கினிகத்தேனை பொலிசார் தெரிவித்தனர்.

இதில் சாரதி லேசான காயங்களுடன் கினிகத்தேனை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும். குறித்த கனரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்தைமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri