கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய கனரக வாகனம்
கிளிநொச்சி ஏ-09 வீதியின் மத்திய கல்லூரிக்கு முன்பாக கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(20.1.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த நவம்பர் மாதம் திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க முற்பட்ட இளம் குடும்பஸ்தரை மோதி விபத்துக்குள்ளாக்கி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் நேற்று முன்தினம்(19) நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பிணைமுறியில் விடுவிக்கப்பட்டது.
கொலை முயற்சி
இதனையடுத்து, குறித்த கனரக வாகனத்தை இன்று காலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மற்றுமொரு கனரக வாகனத்தில் இழுத்துச் சென்ற சமயம் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்தவரின் சகோதரன் மீது இந்த வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார்.
குறித்த விபத்தானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கொலை முயற்சியாக இருக்கலாம் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
அதேவேளை ஒன்றின் பின் ஒன்றாக அழைத்து வரப்பட்ட கனரக வாகனங்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் பொதுமக்கள் இணைந்து வாகனங்களை வழிமறித்தனர்.

அத்துடன்அங்கு அமைதியின்மை ஏற்பட்டத்துடன் நீண்ட நேரத்துக்கு பின்னர் பொலிஸார் குறித்த கனரக வாகனங்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஆரம்பகட்ட விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri