நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை வீழ்ச்சி! வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் (Video)
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று பிற்பகல் (30.04.2023) பெய்த கடும் மழை காரணமாக நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் கோர்ட்லோட்ஜ் சந்தி மற்றும் புதிய வீதி தொகுதியில் உள்ள குடியிருப்புக்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மேலும், கந்தப்பளை பிரதேசத்தில் விவசாய நிலங்கள் நீரினால் மூழ்கியுள்ளதுடன், வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் விளக்குகளை ஒளிரச்செய்தவாறு தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.




பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam
