வடக்கு - கிழக்கில் அறுவடைக்கு தயாராகியுள்ள விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் நாட்களில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த 07.01.2025 அன்று தென் கடலில் உருவாகிய காற்றுச் சுழற்சியானது, தற்போது மாத்தறைக்கு தென் மேற்கு திசையை அண்டிய கடற்பரப்பில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு வேறுபட்ட அளவுகளிலான மழை கிடைக்கப்பெறும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
15.01.2025 காலை மழை சற்று குறைவாக காணப்படும்.
எனினும், நண்பகலின் பின்னர் வடக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.
மேலும், 16.01.2025 அன்று வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும்.எனினும், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு
அத்தோடு, 17.01.2025 அன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மிகச் சிறிய அளவில் மழை கிடைக்கும்.
17.01.2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் 18.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும், 19.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.
மிதமான மழை
20.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.
அத்தோடு, 21.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கில் மக்கள் அறுவடைக்கு தயாாகியுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்ள இந்த முன்னெச்செரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுனிறது.
தண்ணிமுறிப்பு
இந்நிலையில், தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 20.10" அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பெய்யும் கனமழை காரணமாக தண்ணிமுறிப்பு குளம் வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி - ஷான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |