கந்தளாயில் கனமழை : அணைக்கட்டு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட்டம்
கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று(21.10.2026) மாலை பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலப் பிரச்சினை
குறிப்பாக பேராறு, முதலாம் குலனி, இரண்டாம் குலனி மற்றும் அணைக்கட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.

வீடுகளுக்குள் நீர் புகுந்ததால், உடைமைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வீடுகளுக்குள் வெள்ளநீர் தேங்கியதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களின் பாதுகாப்பைக் கருதி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம்காலமாக இப்பகுதியில் மழைக்காலங்களில் இத்தகைய வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும், இதுவரை இதற்கான நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan